தொட்டில் ஆட்டம் போதவில்லை.. தவழ்ந்து பார்க்க ஆசை!

தவழ்ந்து தூரம் போகவில்லை.. எழுந்து நடக்க ஆசை!

நடந்து ஆர்வம் தாங்கவில்லை.. ஓடியாட ஆசை!

ஓடி மேகம் எட்டவில்லை.. உயரம் பறக்க ஆசை!

தனியே பறந்து போதையில்லை.. துணையின்மீது ஆசை!

துணைக்கிவ் வேழை பிடிக்கவில்லை.. செல்வனாக ஆசை!

செல்வம் சேர்ந்தும் மகிழ்ச்சியில்லை.. வாழ்ந்து பார்க்க ஆசை!

வாழ்ந்து பார்க்க வேண்டுமென்று.. இளமைமீது ஆசை!

இழந்த இளமை திரும்பவில்லை..மீண்டும் தொட்டில் ஆசை!

Prem Kumar Easwaran
Prem Kumar Easwaran is a Software Engineer by profession for the past 4 years and a writer by choice for about a decade. His main areas of writing interests are society, national growth, mental health, personal advises and self-improvization though he also writes on few other subjects such as Politics and History. He is active on Quora in the recent days and could be found at 'https://www.quora.com/profile/Prem-Kumar-1012'.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.